மென் பொருளின் தொழில்நுட்ப விபரங்கள்:
தமிழில் சொற்பிழைச்சுட்டி மென்பொருள்:
கணினியில் ஆங்கிலத்தில் தகவல்/கோப்புகளை உள்ளீடு செய்வது நெடுங்காலமாக இருந்து வந்தாலும் தரமான சொற்பிழை/இலக்கணப்பிழைச் சுட்டிகளுக்கான மென்பொருள் ஆங்கிலத்தில் 1990-களிலிருந்து தான் அறிமுகமானது. ஆங்கில மொழிக்கான இம்மென்பொருட்கள் கணினியில் உள்ளீடு செய்பவர்கள் பெரும்பாலும் பிழையின்றி தகவல்/கோப்புகளை உள்ளீடு செய்ய உதவுகிறது.
உலகின் மிகப்பழமையானதும் அதே சமயம் வளம் குன்றாது இருக்கும் செம்மொழியான தமிழில் இரு எழுத்துக்கள் இணைவதற்கான சந்தி மற்றும் புணர்ச்சி விதி முறைகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வகைப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ் மொழியின் இலக்கணங்களை வகைப்படுத்தியதில் அகத்தியர், தொல்காப்பியர் போன்றோர் முதன்மையானவர்கள். இவர்களது அகத்தியம் மற்றும் தொல்காப்பியம் போன்றவையும் இவற்றுக்குப் பிற்கால கட்டத்தில் எழுதப்பட்ட நன்னூல் போன்றவையும் தமிழ்மொழி இலக்கணத்திற்கு அடிப்படையாகும். தற்காலத்தில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சொற்பிழை/இலக்கணப்பிழைச் சுட்டிகளுக்கான மென்பொருட்களில் பெரும்பாலனவைகளில் முதலில் குறிப்பிட்ட சந்தி மற்றும் புணர்ச்சி விதிகளை உள்ளடக்கவில்லை.
சொற்பிழைச் சுட்டிக்கான இம்மென்பொருட்கள் சொற்களின் எழுத்துப் பிழைகளை மட்டும் சுட்டுவதாக அமைந்துள்ளன. சற்றுமுன் குறிப்பிட்ட அடிப்படை இலக்கண விதிமீறல்களை சுட்டிக் காட்டும் திறன் உள்ளவையாக இல்லை. எங்களது மென்பொருள் அடிப்படை இலக்கண விதிகளை உள்ளடக்கியதும் உடனுக்குடன் (மைக்ரோ செகண்ட்டுகளில்-வினாடியில் 1/4 பங்கு நேரம்) சொற்பிழை/அடிப்படை இலக்கணப் பிழைகளை சுட்டுவதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் ஆபீஸ் மென்பொருட்கள் (Word, Excel, Power point, Publisher):
எங்களது சொற்பிழைச்சுட்டி மென்பொருள் மைக்ரோசாப்ட் ஆபீஸ் மென்பொருட்களிள் 35 வகையான (பட்டியலிலுள்ள, Unicode) எழுத்துருக்களையும் தானாகவே இனம் கண்டு சொற்பிழைகளைக் கண்டறிந்து மைக்ரோசாப்ட் வேர்டு மென்பொருளில் உள்ளவாறு (English spell checking) தவறான வார்த்தைகளின் அடியில் சிவப்பு நிறத்தில் அடிக்கோடிட்டிடும். எனவே பயனாளர் குறிப்பிட்ட எழுத்துருவில் மட்டுமே உள்ளீடு செய்ய வேண்டுமென்ற அவசியமில்லை. ஆங்கிலம், தமிழ் இரண்டு உள்ளீடுகளையும் இனம் கண்டு தானாகவே சொற்பிழைகளைக் கண்டறியும்.
மைக்ரோசாப்ட் ஆபீஸ் மென்பொருள் தவிர்த்து நோட்பேடு, வேர்டுபேடு (Notepad, WordPad) ஆகியவற்றில் உள்ளீடு செய்த தகவல்/கோப்புகளையும் எங்களது இணைப்புக் கருவியின் மூலம் சொற்பிழைகளைக் கண்டறியும் வசதி உண்டு.
அகத்தியரும், தொல்காப்பியரும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மொழிக்கான அடிப்படை இலக்கண விதிகளை எழுத்து, சொல் மற்றும் பொருள் என பாகுபடுத்தி வகுத்துள்ளனர். எங்களது மென்பொருளில் எழுத்து மற்றும் சொல் ஆகியவற்றின் அடிப்படை விதிகள் தொல்காப்பியத்தின்படி அமைந்தவை. விரைவில் பொருள் அதிகாரத்தின் விதிமுறைகளும் உள்ளடக்கப்படும்.
தற்காலத்தில் வழக்கில் உள்ள தமிழில், தொல்காப்பியரின் இலக்கண விதிமுறைகள் அவ்வளவாக பின்பற்றப்படுவது இல்லை. தொல்காப்பிய காலத்திற்கு பின் எழுதப்பட்ட இலக்கண நூலான நன்னூலின் விதிமுறைகள் பலராலும் பின்பற்றப்படுகிறது. எங்களது மென்பொருள் தொல்காப்பியம் மற்றும் நன்னூல் ஆகிய இரண்டின் அடிப்படை இலக்கண விதிகளையும் உள்ளடக்கியதாகும். உரைநடைக்கு மட்டுமே நாங்கள் மென்பொருள் உருவாக்கியுள்ளோம். செய்யுள்/கவிதை -க்கு அல்ல.
கணிப்பொறியில் பயன்படுத்த பலரும் பலவிதமாக தமிழ் எழுத்துருக்களை உருவாக்கி புழக்கத்தில் அறிமுகப்படுத்தியுள்ளனர். ஆனால் ஒருவருக்கொருவர் தகவல்/கோப்புகளை (Data / File) பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டியிருந்தால், படிப்பவருக்கு அந்த தகவல்/கோப்பை கணினியில் உள்ளீடு செய்ய பயன்படுத்திய எழுத்துரு தேவைப்படும். இல்லாவிடில் படிக்க இயலாது. இக்குறையை நீக்கும் வகையில் உலகளவில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு வடிவமைத்ததே ‘‘யூனிகோட்''(Unicode) முறையாகும்.
1999 ம் ஆண்டுவாக்கில் நடைமுறைப்படுத்த துவங்கிய இந்த யூனிகோட் முறையானது 2000 ஆண்டும் அதன் பின்னரும் வடிவமைக்கப்பட்ட இயங்கு தளங்களில் மட்டுமே (Operating System) பயன்படுத்த /படிக்க இயலும். அதன் முன்னர் உருவாக்கியதும் தற்போதும் பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படும் இயங்கு தளங்களில்(Windows 98 , Windows ME) இந்த யூனிகோட் முறையை பயன்படுத்த இயலாது. இந்த யதார்த்த நிலையை கருத்தில் கொண்டே எங்களது மென்பொருள் முந்தைய இயங்கு தளங்களிலும் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் சிறப்பு அம்சங்கள்:
(மேற்குறிப்பிட்ட மூன்று மென்பொருள் கருவிகளும் எங்களது இணைய தளத்திலிருந்து இலவசமாய் தரவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.)
- ஆங்கிலம் - தமிழ் அகராதி:
தற்போது ஆங்கில வார்த்தைகளுக்கு ஈடான தமிழ் பொருளை அறிய தனியானதோர் மென்பொருள் மூலம் கண்டறிய இயலும். தற்போது புழக்கத்தில் மின்னணு வடிவில் சுமார் 25,000 ஆங்கில வார்த்தைகளுக்கு ஈடான ஆங்கில - தமிழ் அகராதி உள்ளது. இந்த அகராதியைப் பயன்படுத்தவும் பயனாளர் தனி மென்பொருளில் உள்ளீடு செய்து மட்டுமே காண இயலும்.
தற்காலத்தில் பலரும் தமிழில் தகவல்/கோப்புகளை உள்ளீடு செய்யும் போது வார்த்தைகளையோ, சொற்றொடர்களையோ ஆங்கிலத்தில் உள்ளீடு செய்கிறார்கள். எங்களது மென்பொருள் மூலமாக மைக்ரோசாப்ட் ஆபீஸ் மென்பொருளிலோ அல்லது நோட்பேடு, வேர்டுபேடு (NotePad,WordPad) போன்ற எங்களது செயலியில் ஆங்கிலத்தில் உள்ளீடு செய்யும் போதே அதற்கான தமிழ் பொருள் காண மற்றும் இடைச்செருகல்(Insert) செய்யவும் இயலும். மைக்ரோசாப்டின் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் (Internet Explorer) இந்த தமிழில் பொருள் காணும் அகராதி வசதி எங்களது மென்பொருள் மூலம் சாத்தியப்படும்.
மேலும் மற்ற மென்பொருட்களைப் போல தனித்தியங்கும் (Stand alone mode/Separated ) ஆங்கில-தமிழ் அகராதியும் உண்டு.
- தமிழ் - தமிழ் அகராதி:
எந்தவொரு சொற்பிழைச்சுட்டி மென்பொருளும் தன்னகத்தே மிகக் கணிசமான மொழி அகராதியைக் கொண்டிருக்க வேண்டும். எங்களது மென்பொருளில் தற்போது சுமார் 1,12,000 வார்த்தைகளுக்கான தமிழ் - தமிழ் அகராதி உள்ளடக்கப்பட்டுள்ளது. தனித்தனி சொற்களுக்கு மட்டுமன்றி அவற்றின் தொகுப்புகளுக்கும் (Clusters) இணையான தமிழ் பொருட்கள் உள்ளன.
- வழங்கு/வட்டார தமிழ் சொற்களுக்கு ஈடான சரியான (standard) தமிழ் சொற்கள்:
தற்போது சுமார் 800 வழங்கு/வட்டார தமிழ் சொற்களுக்கு ஈடான சரியான (standard) தமிழ் சொற்கள் எங்களது மென்பொருளில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவற்றின் எண்ணிக்கை மென்மேலும் அதிகப்படுத்தப்படும்.
· தமிழில் உள்ளீடு செய்பவர்களில் பலரும் சரியான தமிழை அறியாதிருக்கிறார்கள். ஆகவே தரமான தகவல்/கோப்புகளை உள்ளீடு செய்யும் போது கூட கொச்சையான வழங்கு/வட்டாரத் தமிழ் சொற்களைப் பயன்படுத்துகிறார்கள். இக்குறையை தவிர்க்கும் நோக்கத்தில் உள்ளீடு செய்பவரின் தமிழ் அறிவை ஓரளவு மேம்படுத்தவும், உள்ளீடு செய்யப்படும் தகவல்/கோப்புகளின் மொழித் தரத்தை ஓரளவாவது உயர்த்தவும், கொச்சையான தமிழ்ச் சொற்களை உள்ளீடு செய்யும் போதே அவைகளுக்கு ஈடான/சரியான தமிழ் சொற்கள் பயனாளியின் கவனத்திற்கு (காண்பிக்கப்படும்) கொணரப்படும்.
· தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் அந்தந்த வட்டார மற்றும் சமூகம்/இனம் சார்ந்த வழங்கு மொழி உள்ளதை அனைவரும் அறிவர். இவ்வழங்கு மொழி சொற்களை உள்ளீடு செய்யும் போதே அவற்றிற்கு ஈடான/சரியான தமிழ் சொற்கள் பயனாளியின் கவனத்திற்கு (காண்பிக்கப்படும்) கொணரப்படும்.
7. பட உலாவி(Picture Browser):
மைக்ரோசாப்ட் வேர்டு மென்பொருளில், கோப்பிற்குள் படங்களை இடைச்செருகல்(Insert) செய்ய, பயனாளி இன்சர்ட்>பிக்சர்>ப்ரம் பைல் (Insert>Picture>From file) என்ற ஆணை அல்லது டெம்ப்ளேட்ஸ் (Templates)கள் மூலமாகவோ இயலும். உள்ளீடு செய்வதிலிருந்து மேற்குறிப்பிட்ட பணியை தனியே செய்ய வேண்டுவதால், இதற்கென தனியான நேரம் செலவாகிறது. ஆனால் எங்களது மென்பொருளில் படங்களை இடைச்செருகல் செய்வது மிக எளிதாக்கப்பட்டுள்ளது. தேவையான அனைத்துப் படங்களும் மைக்ரோசாப்ட் வேர்டு கோப்பின் பக்கவாட்டிலேயே (Microsoft word panel) காண்பிக்கப்படுவதால் பயனாளி எளிதாக தேவையான படங்களை இடைச்செருகல்(Insert) செய்து கொள்ள இயலும்.
இவ்வசதி தற்போது வெளியிடப்பட்டுள்ள மைக்ரோசாப்ட் பப்ளிஷர் அல்லது மைக்ரோசாப்ட் வேர்டு மென்பொருளிலோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தாரின் மென்பொருள் செயல்பாட்டை நாங்கள் மேம்படுத்தியிருக்கிறோம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
8. அறிவியல் சூத்திரம் மற்றும் கணக்கீடுகளை உள்ளடக்கிய மென்பொருள்:
மைக்ரோசாப்ட் ஆபிஸ் மென்பொருள் தொகுப்பில் மைக்ரோசாப்ட் வேர்டு மிகவும் அதிகமாய் பயன்பாட்டிலுள்ள மென்பொருளாகும். அறிவியல் சூத்திரங்கள், கணித/நிதி/பொருளாதார மற்றும் பொதுவான கணக்கீடுகள் அதிகமாயுள்ள தகவல்/கோப்புகளை உள்ளீடு செய்ய வேண்டிய தருணத்தில் பயனாளி வேர்டுக்குப் பதில் எக்ஸல் (Excel) மென்பொருளையோ அல்லது கால்குலேட்டர் (Calculator) மென்பொருளின் உதவியையோ நாடவேண்டியுள்ளது. எங்களது மென்பொருளிலோ எக்ஸல் (அ) கால்குலேட்டரோ தேவையின்றி வேர்டு மென்பொருளிலேயே எக்ஸல் மென்பொருளில் பயன்படுத்தப்படும் ஆணைகள் மூலம் மேற்குறிப்பிட்ட அறிவியல் சூத்திரங்கள்/கணித/நிதி/பொருளாதார கணக்கீடுகள் முதலியவற்றை Office Word பேனலிலேயே செயலாற்றிக் கொள்ள இயலும்.
9. ஆறுமொழிகளுக்கான குறு அகராதி:
தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகள் அனைத்திலும் அதிகப்படியான பயன்பாட்டிலுள்ள சுமார் 1200 சொற்களின் களஞ்சியம் ஒன்று எங்கள் மென்பொருளில் இணைக்கப்பட்டுள்ளது. கணினியில் உள்ளீடு செய்யும் போது எந்த மொழியில் உள்ளீடு செய்தாலும் மற்ற மொழிகளின் ஈடான சொற்கள் கணினி பேனலிலேயே தெரியுமாறு எங்களது மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.